கோயமுத்தூர் நகரின் அருகில் இருந்த கிராமங்களை சேர்ந்த நாங்கள்,சுமார் 1990 –
களின் துவக்கத்தில் அப்பா சுப்பராவ்
சுவாமிகளிடம் தமிழ் பாரம்பரிய வீரக்கலைகள் பயின்றிட ஆர்வமுள்ள ஒரு சிறு இளைஞர்
கூட்டமாக சென்றோம்.
நாங்கள் செல்வதற்கு வெகுநாட்கள் முன்பே அப்பா அவர்கள் விளையாட்டுக்களை தாமே நேரிடையாக கற்றுத்தருவதை நிறுத்திவிட்டார்.
நாங்கள் செல்வதற்கு வெகுநாட்கள் முன்பே அப்பா அவர்கள் விளையாட்டுக்களை தாமே நேரிடையாக கற்றுத்தருவதை நிறுத்திவிட்டார்.
அப்பாவின்
மேற்பார்வையில் அவரது நேரடி சீடர்கள் எங்களுக்கு சிலம்ப வகைகள்,கட்டாரி, வாள்சண்டை,
சுருள்வாள் வீச்சு, மான் கொம்பு, கை
சண்டை, குத்துசண்டை,குஸ்தியின் அடிப்படைகள், வர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சில
சிகிச்சை முறைகள் போன்ற பல்வேறு கலைகளையும் பயிற்றுவித்தனர்.
அப்பா அவர்கள் தமது ஞானத்தின் சாறாக தனிமனித
ஒழுக்கம்., குடும்ப ஒழுக்கம், சாதி, மத, இன, மொழி, தொழில் அல்லது வேறு
எவ்வடிவிலும் பேதமின்மை, சமுதாய பொறுப்புணர்ச்சி, தர்ம சிந்தனை குறித்து பல்வேறு
போதனைகள் செய்தார்.
அப்பா அவர்கள் எங்களுக்கு எதை போதித்தாரோ அதனை வாழ்ந்து காட்டினார். எதை வாழ்ந்து காட்டினாரோ அதனை எங்களுக்கு போதித்தார். அப்பா அவர்களின் வாழ்க்கையும் அவரது போதனைகளும்
ஒரே நேர்கோட்டில் இருந்ததை நாங்கள் அதிசயத்துடன் கண்ணுற்றோம்.
வெறுமனே வீரக்கலைகள் கற்க வந்த எங்கள் மனதில்
ஒரு மாற்றத்தை உணர்ந்தோம்.
பின்னர், அரசுப்பணி, software, KPO என வாழ்க்கை எங்களை எங்கெங்கோ இழுத்து சென்றது.
நாங்கள் எங்கு இருந்த போதும் பயின்றவற்றை எப்போதும் முயற்சியுடன் பயிற்சி செய்து வந்தோம். எங்கு
இருந்த போதிலும் அப்பாவிடமிருந்து கற்றவற்றை இயன்றவரை இந்த சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உந்துதலே இந்த
பணியில் எங்களை ஈடுபடுத்தியது.
மூடநம்பிக்கைகளும், நவீன காட்டுமிராண்டித்தனமும்
மலிந்துவிட்ட இன்றைய கால கட்டத்தில் நம் முன்னோர்கள் காட்டிய வழியே நம்மை மீட்டு
நன்னெறி சேர்க்கும், என்ற அப்பாவின் போதனையை எங்களால் இயன்ற அளவு பரப்பிட எவ்வித
இலாப நோக்கும் இன்றி அப்பாவின் நேரடி, முதல், இரண்டாம் தலைமுறை சீடர்களாலும் இந்த
அமைப்பு நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக